தெய்வங்களின் சிறப்பு
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
*சிவமயம்*
ஸ்ரீ இரட்டை மந்திர மூர்த்தி துணை
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
🌹ஆறுமுகமங்கலம்(மேலக்கோவில்)🌹
*கணபதி சமுத்திரம்*
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
*ஸ்ரீ இரட்டை சுடலை மாட சுவாமி*
*திருக்கோவில்*
இந்த கோவிலில் அமைந்துள்ள தெய்வங்களின் அமைப்பு மற்றும் சிறப்பு.
*இக்கோவில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் ஏரல் நகருக்கு அருகில் உள்ள கணபதி சமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ளது.*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🌞 *நாராயணர்* 🌞
இக்கோவிலில் நாராயணர் கிழக்கு முகமாக தனி கருவரையில் அமர்ந்துள்ளார்.இவர் தான் இக்கோவில் தெய்வங்களின் *தலைமை* .இவர் பூஜை ஏற்ற பின்பு தான் மற்ற தெய்வங்களுக்கு பூஜை.மூலவர் இரட்டை சுடலை அய்யா இருக்கும் இடத்தில் இல்லாமல் இவர் தனியாக சைவ படைப்பை ஏற்று அருள் அளிக்கிறார்.கோவில் திருவிழாவின் போது இவர் முன்னிலையில் தான் *கால் நாட்டு* விழா நடக்கும்.
நாராயணருக்கு *நெய் தீபம்* ஏற்றி வழிபட்டு வந்தால் சகல பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
🕉🕉🕉
🌞 *பிரம்மசக்தி* 🌞
தாயான பிரம்மசக்தி அம்மன் கருவரையில் இரட்டை சுடலை அய்யாவிற்கு வலதுபுறம் அமர்ந்து மக்களுக்கு அருள் அளிக்கிறாள்.தாயை வேண்டினால் கிடைக்காத வரம் இல்லை.தாய் முன்னால் இருக்கும் *அன்னக்குழி* தீருநீரு எந்த நோய்களுக்கும் மருந்தாகும்.அன்னக்குழி தீருநீரு எடுக்கும் போது எந்த வித அசைவ உணவுகளும் உணவில் எடுக்க கூடாது.
🕉🕉🕉
🌺🌺🌺🌼🌼🌼🌻🌻🌻🌸🌸🌸
🌞 *இரட்டை சுடலை மாட சுவாமி* 🌞
மூலவரான இரட்டை சுடலை அய்யா கிழக்கு நோக்கி அமர்ந்து அருளாட்சி செய்கிறார். *மண் பீடத்தில்* என்றும் இருந்து வேண்டியதை கொடுக்கிறார்.இவருக்கு இரண்டு இடத்தில் பூஜை உண்டு.அதாவது முதலில் சாமியின் முன்னே ஒரு பூஜையும் இரண்டாவது இவருக்கு இடது புறம் ஒரு பூஜையும் உண்டு.
நீதிமன்றத்தில் சாட்சி சொல்லியதால் இவருக்கு *ஐக்கோர்ட் மகாராஜா* என்ற பெயரும் உண்டு.தாமிரபரணி ஆற்றின் வழியில் வந்து சாமி அமர்ந்ததாக வரலாறு உள்ளது.பனைமரங்களுக்கு நடுவில் நல்ல காற்றோட்டமான பகுதியில் இரட்டை சுடலை அய்யா இருக்கிறார்.
இவரின் *சாம்பல்* (தீருநீரு) தீராத வினையெல்லாம் தீர்க்கும்.
ஆறுமுகமங்கலத்தில் முதல் கோவிலாக அமைந்ததால் இக்கோவில் *ஆறுமுகமங்கலம் மேலக்கோவில்* என்றும் இரட்டை சுடலை அய்யா *ஆறுமுகமங்கலத்தான்* என்றும் அழைக்கப்படுகின்றார்.
அய்யாவிடம் *தடங்கல்மனு* கொடுத்தால் விரைவில் பிரச்சனைகள் தீரும்.
சுவாமிக்கு *நெற்றிக்காசு* கொடுப்பது சிறப்பு வழக்கமாக உள்ளது.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🕉🕉🕉
🌞 *லாட குரு சந்நியாசி* 🌞
இவர் இரட்டை சுடலை அய்யாவிற்க்கு இடது புறத்தில் அமர்ந்திருக்கிறார்.இவர்தான் இக்கோவில் அமையும் போது தெய்வங்களின் பீடங்கள் எந்த இடத்தில் அமைக்க வேண்டும் என சொல்லிவிட்டு அவர் இருக்கும் இடத்தில் மறைந்துவிட்டதாக வரலாறு உள்ளது.
🕉🕉🕉
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
🌞 *சிவனைந்த பெருமாள்* 🌞
இவர் கருவரையில் மேற்கு நோக்கி பிரம்மசக்தியம்மனுக்கு எதிராக இருக்கிறார்.இவருக்கு கொடை விழாவின் போது சிறப்பு அலங்காரங்கமும் பொங்கல் மற்றும் கிடாவும் உண்டு.இவர் *மதிய கொடைக்காரர்* என அழைக்கப்படுகிறார்.
🕉🕉🕉
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🔥 *பரிவார தெய்வங்கள்* 🔥
🌞 *கசமாடன்* 🌞
🌞 *கசமாடத்தி* 🌞
இவர்கள் இருவரும் பரிவார தெய்வங்களாக கிழக்கு நோக்கி இரட்டை சுடலை கோவில் உள்ளே இருக்கிறார்கள்.
இந்த இரண்டு தெய்வங்களும் கணபதி சமுத்திரம் ஊருக்கு மேற்கு திசையில் கிழக்கு முகமாக வயல் நடுவில் மரத்திற்கு அடியில் குடிகொண்டுள்ளனர்.இந்த கோவிலும் இரட்டை சுடலை கோவிலுடன்தொடர்பு உடையது.இக்கோவில் கொடையின் போது இரட்டை சுடலை கோவிலில் பூஜை முடிந்த பின்னர் தான் இங்கு பூஜை நடக்கும்.
இரட்டை சுடலை கோவிலுக்கு வருபவர்களில் சில குடும்பங்கள் இக்கோவிலும் சென்று கசமாடன் மற்றும் கசமாடத்தியையும் வணங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
🌞 *சொரிமுத்தையன்*' 🌞
🌞 *பூரணபொஸ்கலை அம்மன்* 🌞
🌞 *சங்கிலி பூதத்தார்* 🌞
இவர்கள் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.இதில் சொரிமுத்தையன் கிழக்கு நோக்கியும் பூரண பொஸ்கலை அம்மன் மற்றும் சங்கிலி பூதத்தார் வடக்கு நோக்கியும் அமர்ந்துள்ளனர்.
🕉🕉🕉
🔥🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🔥
🌞 *பதினெட்டாம்படி கருப்பசாமி* 🌞
இக்கோவிலில் தெற்குமுகமாக இவர் இருக்கிறார் கருப்பசாமி. *வெள்ளைக்குதிரை* வாகனத்துடன் மரத்தில் செய்யப்பட்ட தேரில் *கம்பீரமான* தோற்றத்துடன் அருள்பாலிக்கிறார்.இவரின் உருவம் *ஒரே மரத்தில்* செய்யப்பட்டுள்ளது.உருவம் செய்யும்போது ஏற்ப்படும் உளி தடங்கள் ஏதுவும் அவர் மீது இல்லை என்பது குறிப்பிடதக்கது. இவரிடம் முறையிட்டு சென்றால் அவர் எங்கும் வந்து பிரச்சனைகளை தீர்ந்து வைப்பார்.சாமியின் காலடியில் *முட்டை,தேங்காயை* தலை சுற்றி வைத்து சென்றால் எந்தவித பிரச்சனைகளையும் தீரும்.
🔱🔱🕉🕉⚜⚜🔯🔯🔱🔱
🌞 *பலவேசக்காரன்* 🌞
இவரும் பரிகார தெய்வம்.கருப்பசாமிக்கு வலது புறத்தில் அமர்ந்திருக்கிறார்.பல வடிவங்கள் எடுத்ததால் இவருக்கு பலவேசக்காரன் என பெயர் வந்தது.
🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸🌿🌸
🌞 *பரிகார தெய்வங்கள்* 🌞
🌞 *ஈன மாடன்* 🌞
🌞 *புலமாடன்* 🌞
🌞 *பட்டவராயன்* 🌞
இந்த பரிகார தெய்வங்கள் கருவரைக்கு வெளியே உள்ளார்கள்.இதில் ஈன மாடன் மற்றும் புல மாடன் ஆகியோர் மேற்கு நோக்கியும் பட்டவராயன் தெற்கு நோக்கியும் அமர்ந்திருக்கிறார்கள்.
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
இதுவரை மேற்கு கோவிலில் உள்ள தெய்வங்களை பற்றி பார்த்தோம்.இனிமேல் கிழக்கு கோவிலில் உள்ள தெய்வங்களை பற்றி பார்ப்போம்.
🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱
கிழக்கு கோவிலில் உள்ள தெய்வங்கள்
🌞 *பிரம்மசக்தியம்மன்* 🌞
🌞 *இரட்டைசுடலை மாட சுவாமி* 🌞
🌞 *பதினெட்டாம்படி கருப்பசாமி* 🌞
🌞 *பலவேசக்காரன்* 🌞
🌞 *சத்ராதி முண்டன்* 🌞
🌞 *பேச்சியம்மன்* 🌞
மேற்கு கோவிலில் உள்ள தெய்வங்கள் கிழக்கு கோவிலிலும் இருக்க காரணம் சத்தியம் செய்யும் மக்கள் மேல் உள்ள தெய்வங்களின்
முன்னால் சத்தியம் செய்ய வேண்டும் என்பதற்காக அமைந்துள்ளது.அந்த காலத்தில் களவு போன்ற பிரச்சனைகளை தீர்க்க சாமிகளின் முன்பு சத்தியம் செய்வது வழக்கம்.
இங்கு பிரம்ம சக்தி மற்றும் இரட்டை சுடலை மாட சுவாமி ஆகியோர் கிழக்கு நோக்கியும் கருப்பசாயி மற்றும் பலவேசக்காரன் ஆகியோர் தெற்கு நோக்கியும் இருந்து அருள்பாலிக்கிறார்கள்.
💐🔱💐🔱💐🔱💐🔱💐🔱💐🔱
🌞 *சத்ராதி முண்டன்* 🌞
பிரம்மசக்தியம்மனுக்கு எதிர்த்தாற் போல் இவர் அமர்ந்துள்ளார்.
முண்டன் சுவாமி இக்கோவிலில் *சின்னசாமி* என்று அழைக்கப்படுகிறார்.
கொடை விழாவானது முண்டனிடம் உத்தரவு கேட்ட பின்பு தான் முடிவு செய்யப்படும்.அவர் உத்தரவு தரவில்லையென்றால் கொடை விழா நடக்காது.உத்தரவை கௌவ்லி மூலம் சுவாமி தெரிவிப்பார்.இன்றுவரைக்கும் அய்யா *ஓலைப்பரையில்* தான் இருக்கிறார்.சொன்ன சொல்லை நிரைவேற்றும் துடியான தெய்வமாக இருக்கிறார்.கிழக்கு கோவிலில் பூஜை நேரத்தின் போது மகுடம்,ராஜ மேளம் போன்றவை வாசிப்பது இல்லை.
பூஜையின் போது இவர் முன்னால் எள் வாங்கி எரித்தால் *சனி தோஷங்கள்* விலகும்.
கோவிலில் எந்தவித முடிவு எடுத்தாலும் முண்டனிடம் உத்தரவு வாங்கிய பின்புதான் செயல்முறை படுத்தப்படும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🌞 *பேச்சியம்மன்* 🌞
தாய் பேச்சியம்மன் மகன் சத்ராதி முண்டன் உடன் இருந்து மக்களுக்கு தீராதவினையெல்லாம் தீர்த்துவைக்கிறாள்.பிள்ளைவரம் வேண்டுபவர்கள் இங்கு வந்து *சீலைப்பிள்ளைக்காரி* யான பேச்சியம்மனை வணங்கினால் பலன் கிடைக்கும்.பூஜையின் போது அம்மனுக்கு *மஞ்சனை* காணிக்கை வைப்பது சிறப்பாகும்.மகனுக்கு படையல் வைத்த பிறகு தான் தாய் பேச்சியம்மனுக்கு வைப்பது தாய்மை குணத்தை உணர்த்தும் பண்பாகும்.இந்த வழக்கம் இந்த கோவிலில் இன்றும் உள்ளது.கடைசி பூஜையை ஏற்பது தாய் பேச்சியம்மன்.
திருமணம் நடக்க வேண்டுபவர்கள் தாய்க்கு *பொட்டு தாலி* எடுத்து வைப்பது சிறப்பு அம்சம்.
🔥☘🔥☘🔥☘🔥☘🔥☘🔥☘
*இக்கோவிலில் மூன்று மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை இரவு தங்கி சாம பூஜையை வழிபட்டால் நீண்ட காலம் நிரைவேறாத காரியங்களும் கூடிய விரைவில் நடக்கும்.*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏

Comments
Post a Comment